முதலீடுகளுக்காக தனி இணையதளம்- தமிழக அரசு துவக்கியது
சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூதலீடுகளை கவரும் முயற்சியாக தனி இணையதளம் ஒன்றை தமிழக அரசு துவக்கியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பயன்படும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள், முதலீடு வழிமுறைகள், தொழில் தொடங்க தேவையான அரசாங்க சம்பிரதாய முறைகள என பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ உள்ள முதலீட்டாளர்கள் இந்த இணையதளத்தின் மூலமாகவே 'சாட்டிங்' செய்து தகவல் பரிமாறிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://www.investingintamilnadu.com/ என்ற இந்த இணையதளத்தை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று துவக்கிவைத்தார்.
தமிழகத்தில் தொழில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications