ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம்
Subscribe to Oneindia Tamil

தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை இலவச இந்த வேட்டி சேலைகள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கான விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்று இலவச வேட்டி,சேலையை தன் கையால் வழங்குகிறார்.
மாவட்ட தலைநகர்களில் அமைச்சர்களும், தொகுதிகளில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களும் வழங்குவார்கள்.
இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு 256 கோடி ரூபாய் செலவாகிறது என்றும் இதன் மூலம் 3.28லட்சம் பேர் பயன்அடைவார்கள் என்றும் தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications