பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை தாண்டும்: பிரதமர்

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
புவனேஷ்வர்: நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் உயரும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வரில் இன்று இந்திய பொருளாதார கூட்டமைப்பின் 92வது ஆண்டு மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்து பேசுகையில்,

'2008ம் ஆண்டில் நமது பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடியால் அப்போது வளர்ச்சி 6.7 சதவீதத்தில் நின்றுபோனது.

ஆனால், 2009-10 நிதியாண்டில் நம்முடைய பொருளாதாரம் 7 சதவீதம் அல்லது அதற்கு மேல் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைகளால், ஏழைகளுக்கு பாதகமான விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. நம்முடைய மக்கள் தொகையில் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு தான் வருகிறது.

ஆனாலும், தற்போதைய நிலையால் நான் திருப்தி அடைந்ததாக கருதக்கூடாது. நாம் அடைந்துள்ள வளர்ச்சி போதுமானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்க இன்னும் ஏராளமாகவும், வேகமாகவும் செயல்படவேண்டியுள்ளது' என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+