திவாரியின் இன்னொரு செக்ஸ் லீலை அம்பலம்!
ஹைதராபாத்: என்.டி.திவாரி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அஜால் குஜாலாக இருந்த காட்சி அடங்கிய ஒரு பழைய வீடியோ இப்போது சிக்கியுள்ளது.
காம லீலைகளில் கரைபுரண்டவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் என்.டி.திவாரியின் தில்லாலங்கடி வேலைகள் அமைந்துள்ளன.
17 வயதிலிருந்து 86 வயது வரை இடைவிடாமல் இன்பக் களியாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளது படிப்படியாக அம்பலமாகி வருகிறது.
அவரது பழைய நாற்றம் அடிக்கும் அந்தரங்கங்கள் இப்போது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு 80-களில் என்.டி. திவாரி ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ டேப் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலக்கட்டத்தில் என்.டி.திவாரி மத்திய அமைச்சராக இருந்தார்.
அரசு முறை பயணமாக ஒரு தடவை அவர் ஆந்திரா வந்தார். அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்யுமாறு அப்போதைய ஆந்திரா முதல்வர் என்.டி. ராமராவ் உத்தரவிட்டிருந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த என்.டி. திவாரி அரசு காரில் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.
அன்றிரவு தனியார் ஒருவரின் சாதாரண காரில் என்.டி.திவாரி ரகசியமாக வெளியில் புறப்பட்டுச் சென்றார்.
ஒரு இடத்தில் திவாரிக்காக அழகிய இளம்பெண் தயார் நிலையில் இருந்தாராம். அந்த அழகியுடன் ஒரு பங்களாவுக்குச் சென்றார் திவாரி.
இதையறிந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், திவாரியும், அந்தப் பெண்ணும் அந்தரங்கமாக இருந்ததை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
திவாரி தங்கிய படுக்கை அறை ஜன்னலில் வீடியோ காமிராவை பொருத்தி உள்ளே நடந்த செக்ஸ் காட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் திவாரியின் அந்தரங்க சேஷ்டைகள் அதில் பதிவாகியுள்ளன. பின்னர் அதை பிரதி எடுத்துக்கொண்டு டேப்பை அவர் உயர் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார். ஆந்திரா உளவுத்துறை அந்த வீடியோ டேப்பை தற்போதும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
திவாரியின் அசிங்கத்தை ரகசியமாக படம் பிடித்த அந்த உளவுத்துறை அதிகாரி தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் திவாரி கேசட்டை தற்போதும் அவர் பத்திரமாக வைத்துள்ளார்.
திவாரியின் லேட்டஸ்ட் சேஷ்டைகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து பழைய சேஷ்டை காட்சியை அம்பலப்படுத்தியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications