நிமோனியாவால் பாதிப்பு- ஜோதி பாசு உடல் நலம் ஸ்திரம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜோதிபாசுவின் உடல் நலம் ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
95 வயதாகும் ஜோதிபாசுவுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோதிபாசு உடல் நிலை குறித்து டாக்டர்கள் கூறுகையில், ஜோதிபாசுவின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் ஸ்திரமாக உள்ளார். சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார் என்றனர்..












Click it and Unblock the Notifications