இலங்கை தமிழ் அமைச்சர் சந்திரசேகரன் மரணம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை தமிழ் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இலங்கை, மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியின் தலைவராக இருந்தவர் சந்திரசேகரன். அந்நாட்டு சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சந்திரசேகரனுக்கு வயது 52. 1957-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி பிறந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார்.

பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி மலையக மக்கள் முன்னணியை தோற்று வித்தார். 2001-ம் ஆண்டு முதன் முதலில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

ராஜபக்சேவுக்கு ஆதரவு தந்து அமைச்சர் பதவியைப் பெற்றார். இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இடையே சமரச பேச்சு வார்த்தைக்கான பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+