உ.பியில் கடும் பனி மூட்டம்: 4 ரயில்கள் மோதல்-10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Train
எடாவா: கடும் பனி மூட்டம் காரணமாக சிக்னல்கள் சரியாகத் தெரியாததால் தவறான பாதைகளில் சென்ற இரு ரயில்கள் பிற ரயில்கள் மீது மோதியதில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் இருவேறு இடங்களில் இந்த விபத்துக்கள் நடந்தன.

வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இன்று அதிகாலையில், உ.பி. மாநிலம் எட்டாவா அருகே சரைபோபட் என்ற இடத்தில் மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது.

அப்போது பனி மூட்டத்திற்கு இடையில் வந்து கொண்டிருந்த பீகார் செல்லும் லிச்சாவி எக்ஸ்பிரஸ், மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த பாதையில் தவறாக நுழைந்து மோதி விட்டது.

மகத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்ததால், லிச்சாவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஸ்டாப் சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பனி மூட்டத்தி்ல் ஸ்டாப் சிக்னலை லிச்சாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் கவனிக்கவில்லை.

இதனால் மகத் எக்ஸ்பிரஸ் நின்றிருந்த அதே தண்டவாளத்தில் லிச்சாவியும் வந்ததால் விபத்து ஏற்பட்டு விட்டது.

இதில் லிச்சாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் 5 பேரும் பலியாயினர்.

அதே போல கான்பூர் மாவட்டத்தில் பங்கி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் மீது திவானி கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இந்த விபத்தில் பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டி நொறுங்கியது. கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் கடும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூத்த பாஜக முரளிமனோகர் ஜோஷி பயணம் செய்தார். அவர் காயமின்றி தப்பிவிட்டார்.

இந்த விபத்துக்களில் மொத்தத்தில் 10 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

அதே போல பிரதாப்கர் பகுதியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் டிராக்டர் மீது சரயு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

பல விமானங்கள்ம் ரத்து:

இதற்கிடையே டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயங்கி வருகின்றன.உள்ளாகியிருக்கிறார்கள்.

ரன்வே தெளிவாகத் தெரியாததால் டெல்லியில் இறங்க வேண்டிய 9 வெளிநாட்டு விமானங்கள் மும்பை, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னையிலிருந்து டெல்லி புறப்பட வேண்டிய சில விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+