தமிழகம்: 887 பேருக்கு சிக்குன் குனியா- சுகாதாரத்துறை

தமிழக சுகாதார துறை இயக்குனர் இளங்கோ நெல்லை மாவட்டத்தில் வைரஸ் நோய் பாதிப்பு குறித்து நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூரி்ல் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நோயின் தன்மை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் சந்தேகத்தின் பேரில் 3221 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 887 பேருக்கு சிக்குன் குனியா இருப்பது தெரிய வந்துள்ளது.
11 மாவட்டங்களில் வைரஸ் நோய் தாக்குதல் இருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை, தேனி, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் இல்லை.
2006ம் ஆண்டு பரவிய சிக்குன் குனியாவுடன் ஓப்பிடுகையில் இந்நோய் வித்தியாசமாக உள்ளது. அந்நோய் அப்படியே நோயாளிகளை முடக்கி விடும்.
வைரஸ் நோயை கட்டுபடுத்த அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை' என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications