பதவி இல்லை-தீக்குளிக்க முயன்ற அதிமுக பிரமுகர்
நெல்லை: கட்சியி்ல் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த நெல்லை அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயன்று கைதானார்.
நெல்லை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 22-வது வார்டுக்கும் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது.
அதில், பாளையங்கோட்டை சிவன் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த அருணாசலம் (64) என்பவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், பாளை. 22-வது வார்டில் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக செயல்பட்டு வந்த அவருக்கு பொறுப்பில் தொடர அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அருணாசலம் நேற்று காலை பாளை. மார்க்கெட் அருகே உள்ள புறக்காவல் நிலையத்துக்கு திடீர் என்று மண்எண்ணை கேனுடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் நான், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி மண்எண்ணை கேனுடன் அந்தப் பகுதியில் ஓடினார்.
பின்னர் நடுரோட்டில் நின்றுகொண்டு தலையில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அருணாசலத்தை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை பாளை. போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது போலீஸாரிடம் அருணாச்சலம் கூறுகையில்,
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியது முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 22-வது வார்டு நிர்வாகியாக செயல்பட்டு வந்த எனக்கு அந்தப் பதவியில் தொடர அனுமதி அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கின்றனர்.
மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கடந்த தேர்தலில் பிற கட்சிகளுக்கு வேலை செய்தவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகளுக்கு கட்சியில் மரியாதை கொடுப்பது இல்லை. எனவே அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றார்.
பின்னர் அருணாச்சலம் தற்கொலைக்கு முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications