இந்தியர் கொலை: இனவெறி தாக்குதல் இல்லை-ஆஸி
சிட்னி: மெல்போர்ன் நகரில் இந்தியர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஆஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகரில் தான் வேலை பார்த்து வந்த ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது நிதின் கார்க் என்ற 21 வயது இந்திய மாணவர் குத்திக் கொல்லப்பட்டார். இதனால் ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இந்தியர்கள் மீது அங்கு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கொலை விழுந்துள்ளது இந்தியர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறுகையில், இந்த சம்பவத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
சர்வதேச மாணவர்களை இந்த நாடு முழு மனதுடன் வரவேற்கிறது. அனைவரையும் மனதார வரவேற்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றுக்குப் பிறகு பெருமளவில் வருமானம் தேடித் தருவது சர்வதேச மாணவர்கள்தான். 2007-08ம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த வருவாய் 13 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அரசு கவலை அடைந்துள்ளது.
இனவெறித் தாக்குதல் இல்லை-போலீஸ்:
இதற்கிடையே, நிதின் கார்க் இனவெறித் தாக்குதலுக்குப் பலியாகவில்லை. இது ஒரு சாதாரண குற்றச் செயல்தான் என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறுகின்றனர்.
விக்டோரியா மாகாண காவல்துறை அதிகாரி டேவ் சினேர் இதுகுறித்துக் கூறுகையில், இது முற்றிலும் குற்றச் செயல் மட்டும்தான். இனவெறித் தாக்குதலாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications