பெங்களூர்: பட்டப்பகலில் பெண்ணை மானபங்கப்படுத்திய ஆட்டோ டிரைவர்கள்
பெங்களூர்: மீட்டர் அதிவேகமாக ஓடுவதை தட்டிக்கேட்ட பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து உடைகளையும் கிழித்து, மானபங்கப்படுத்தி, பட்டப்பகலில் நடுவீதியில் வெறித்தனம் செய்த கொடுர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து சனிக்கிழமை காலை 33 வயது பெண்மணி ஒருவர் ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். பொதுவாக இரண்டு கி.மீட்டர் கடந்த பின்னரே ஆட்டோவின் மீட்டரில் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.14ல் இருந்து மாறும்.
ஆனால், ஆட்டோ கிளம்பியவுடனேயே மீட்டரில் கட்டணம் கிடுகிடுவென மாறியது. இதனால் அதிருப்தியடைந்த அப்பெண் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.
குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய் தான் தரமுடியும் எனக் கூறியுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். தர முடியாது எனக் கூறிய அப்பெண், 15 ரூபாயை கொடுத்துவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.
பின்னாலேயே வந்த ஆட்டோ டிரைவர் அப்பெண்ணிடம் வம்பு செய்துள்ளார். அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு அப்பெண்ணிடம் வம்பு செய்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அப்பெண்ணை பலவந்தமாக இடித்தும், தாக்கியும், உடைகளை கிழித்தும் பானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பகல் 11 மணிக்கு நடுவீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இருந்து எப்படியோ தப்பி வந்த அப்பெண் அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார்.
ஆனால் இதை கண்டுகொள்ளாத போலீசார் புகாரையும் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனமுடைந்த பெண், போலீஸ் கமிஷனர் ஷங்கர் பிதரியிடம் புகார் தெரிவித்தார்.
கமிஷனரின் நேரடி உத்தரவுக்கு பின்னர் அப்பெண்ணின் புகார் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications