கேரளா செல்லும் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை
சென்னை: கேரளா செல்லும் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அனைத்து கேரளா செல்லும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கேரள நுண்ணறிவு பிரிவு போலீஸ் எஸ்.பிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததது. அந்த கடிதத்தில் கோவை வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, ரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் கேரள எல்லையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்டு கடும் சோதனை செய்யப்பட்டன.
மேலும், சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை விடுத்தவர் குறித்து விசாரணை நடந்தது. இதில், கேரளாவை சேர்ந்த முகமது யூசுப் என்பவர்தான் கடிதத்தை அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மிரட்டல் மற்றும் சோதனையால் ரயில் நிலையங்களில் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications