ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தேர்தல் பணியாற்ற தடை- தேர்தல் கமிஷனுக்கு ஜெ. கோரிக்கை

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டால் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு மீண்டும் பணியமர்த்தப்படும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கே விசுவாசமாக செயல்பட்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவதால் கவர்னர் அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். ஆளும் கட்சியின் கருணையால் மட்டுமே அவர்கள் செயல்படுவார்கள். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது அரசு சட்டதிட்டங்களின்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கவர்னர் அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் செயல்படும் அரசு ஊழியர்களை மட்டுமே தேர்தல் பணியில் நியமிக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற மேற்கூறிய விஷயத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications