டெல்லி: சகஜநிலைக்கு திரும்பிய விமான சேவை- ரயில் சேவை பாதிப்பு
டெல்லி: டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இன்று சகஜநிலைக்கு திரும்பியுள்ளது. விமானங்கள் வழக்கம் போல இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பனிமூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டன.
மேலும், ஓடுதளத்தில் பனிப்பொழிவை அளக்கும் கருவிகள் பழுதடைந்ததால் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன. இதனால், 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளநாட்டு விமானங்களின் போக்குவரத்து தடைபட்டது.
சனிக்கிழமையன்று ஓடுதளப் பாதை 200 மீட்டருக்கு அப்பால் கண்ணுக்கு புலப்படாத ஆளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. நேற்று நிலைமை சற்று சீரானது. சுமார் 1,500 முதல் 2,000 மீட்டர் தொலைவு வரை காட்சி தெளிவாக இருந்தது.
இதனால் நேற்று சில விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. நேற்று காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
டெல்லி வழியாக வரவேண்டிய 18 விமானங்கள் வெவ்வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் இன்று ஓடுதளத்தில் பனிப்பொழிவு குறைந்து 2000 மீட்டர் வரை தெளிவாக காட்சிகள் தெரியும் நிலையில் உள்ளது.
இதனால் அனைத்து விமானங்களும் வழக்கம் போல இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவை தொடர்ந்து பாதிப்பு:
ஆனால், கடும் பனி்மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் செல்லும் மாகத் எக்ஸ்பிரஸ், தார்பங்கா செல்லும் ஸ்வதந்திர சேனை எக்ஸ்பிரஸ், டெல்லி-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், கால்கா மெயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் 12க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லிக்கு தாமதாக வந்துசேரும் என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
காசி விஷ்வநாத் எக்ஸ்பிரஸ், போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ், கௌஹாத்தி, மதாநந்தா எக்ஸ்பிரஸ் ஆகியவையும் திட்டமிட்ட நேரத்துக்கு மாறாக இயக்கப்படுகின்றன.
டெல்லியில் இன்று காலை 10 மணிக்குள்ளாக 12க்கும் மேற்பட்ட ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு 10 மணிநேரம் வரை தாமதமானது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications