டெல்லியில் மூடுபனி - விமானங்கள் தாமதம்- சென்னையில் அமைச்சர்கள், பயணிகள் தவிப்பு
சென்னை: மூடுபனி காரணமாக டெல்லி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால், சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், மத்திய அமைச்சர்கள் தவிக்க நேரிட்டது.
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சற்று பனி மூட்டம் குறைவாக இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு டெல்லியிலிருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தமானில் இருந்து சென்னைக்கு மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சச்சின் பைலட் ஆகியோர் மாலை 3 மணிக்கு வந்தனர். பின்னர் சென்னையில் இருந்து 5.55 மணிக்கு டெல்லி செல்ல காத்திருந்தனர்.
டெல்லியில் கடுமையான பனிபொழிவால் விமானம் தாமதமாக இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பரூக், பைலட் உள்பட 117 பேர் செல்ல தயாராக இருந்தனர். டெல்லியில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து பயணிகளும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பயணிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 12 மணி நேர தவி்ப்புக்குப் பின்னர் இவர்கள் டெல்லி போய்ச் சேர்ந்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொழும்பிற்கு விமானம் செல்ல வேண்டும். இதில் செல்ல 167 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து வரவேண்டிய விமானம் வராததால் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 2.45 மணி வரை விமானம் வராததால் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கோஷம் போட்டனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. அவர்களில் 90 பயணிகள் வேறு விமானத்தில் காலை 7 மணிக்கு கொழும்பிற்கு சென்றனர். 40 பயணிகள் பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள பயணிகள் இன்று செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications