பாஸ்போர்ட் பெற ஆள் மாறாட்டம் செய்தவர் கைது
கடையநல்லூர்: கடையநல்லூரில் ஆள் மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் அய்யாத்துரை, காளிபாண்டி. அய்யாத்துரை சிங்கபூரில் பணிபுரிந்து வருகிறார். காளிபாண்டி சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்கு திரும்பி வராமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து மலேசியா போலீசார் காளிப்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தண்டனை காலம் முடிவடைந்ததும் மலேசியாவில் இருந்து காளிப்பாண்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பிறகு அவர் கடந்த சில மாதங்களாக கடையநல்லூரில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பினார். ஆனால், பாஸ்போர்ட்டை அரசு முடக்கிவிட்டதால் ஆள் மாறாட்டம் செய்து புதிய பாஸ்போர்ட், விசா வாங்க முடிவு செய்தார்.
அதன்படி சிங்கபூரில் வேலை பார்த்து வரும் அய்யாத்துரையின் வீட்டு ரேசன் அட்டையை வாங்கினார். அதில் அய்யாத்துரை மற்றும் அவரது குடும்பத்தினரின் விபரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்ணை அய்யாத்துரை எனக் கூறி ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பாஸ்போர்ட் பெற காளிப்பாண்டி விண்ணப்பித்தார். முகவரி மற்றும் விவரங்களை சரி பார்க்க கடையநல்லூர் போலீஸ் ஏட்டு கிருஷ்ணன் அய்யாத்துரை வீட்டிற்கு வந்தார்.
அப்போது அய்யாத்துரை பெயரில் ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற காளிப்பாண்டி முயற்சிப்பது தெரிய வந்தது. இதனை தொடர்நது ஆள்மாறாட்ட மோசடி செய்ததாக காளிப்பாண்டி கைது செய்யப்பட்டு தென்காசி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications