எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே!
கொழும்பு: அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சே, எஸ்எம்எஸ், இன்டர்நெட் மூலம் வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று அனைத்து செல்போன் நெட்வொர்க் மூலம் மக்களிடம் பிரசாரம் செய்தார். இதில், "நான் உங்களுக்கு (மக்களுக்கு) சுதந்திரமான நாட்டை தருவேன். இதன்மூலம் உங்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மகிந்த ராஜபக்சே" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புத்தாண்டு அன்று ராஜபக்சே 1 கோடியே 26 லட்சம் எஸ்.எம்.எஸ்.க்களை அனுப்பினார். மேலும் இன்டர்நெட் மூலமும் இவர் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழர் பகுதிகளி்ல் தமிழில் பேசி ஓட்டுக் கேட்கிறார். தொலைபேசிகளில் திடீரென்று இவர் குரல் ஒலிக்கிறதாம்.
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் எஸ்.எம்.எஸ். மற்றும் இன்டர்நெட் மூலம் பிரசாரம் செய்வது இதுவே முதல் முறை என்கிறது இலங்கை மீடியா.


Click it and Unblock the Notifications
