தூத்துக்குடியில் 2 பள்ளி மாணவிகள் கடத்தல்
தூத்துக்குடி: பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 2 மாணவிகளை கடத்தி மயக்க மருந்து கொடுத்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சவேரியர்புரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கண்ணன் மகள் மாரீஸ்வரி. அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் மகள் பிரியா.
இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். மாரீஸ்வரி 5ம் வகுப்பும், பிரியா 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தினமும் இருவரும் பள்ளிக்கு சேர்ந்தே செல்வது வழக்கம்.
இன்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்றபோது மாணவிகள் இருவரையும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் கத்திமுனையில் மிரட்டி கடத்திச் சென்றதாக தெரிகிறது.
பாலதண்டாயுத நகரில் மறைவான ஒரு இடத்தில் மாணவிகள் இருவரையும் உட்கார வைத்து மயக்க மருந்து கலந்த தண்ணீரை குடிக்க வைத்துள்ளனர். அதை அரைகுறையாக குடித்த மாணவிகள் சமயோசிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து திடீரென தப்பியோடினர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிக்கு சென்ற மாணவிகள், தாங்கள் கடத்தப்பட்டது குறித்து அங்கிருத்த கடைக்காரர்களிடம் கூறினர். இதைப் பார்த்தும் கடத்தல் பேர்வழிகள் ஓடி மாயமாகி விட்டனர்.
இந்நிலையில், மயக்க மருந்து கலந்த தண்ணீர் குடித்ததால் 2 மாணவிகளும் மயங்கி விழுந்தனர். மாணவிகளை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் பேர்வழிகளை தேடிவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications