இது தான் மதச்சார்பின்மையா?-பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினத்தினரைப் போல இந்து மாணவர்களுக்கும் கல்விச் சலுகை அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் கல்விச் சலுகை வழங்க அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 439 கிருஸ்துவ, முஸ்லிம் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ.26.22 கோடி கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தை அரசு விரிவுபடுத்தி வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

பெரும்பான்மை இந்து சமுதாய மாணவர்களை புறம் தள்ளிவிட்டு கிருஸ்துவ, முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்குவது மதச்சார்பற்றதன்மை ஆகாது.

அரசு, இந்தக் கோரிக்கையை நிராகரிக்குமானால் தமிழகம் முழுவதும் மாணவர்களைத் திரட்டி பாஜக போராட்டம் நடத்தும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+