கனிமொழியின் கார் மோதி கல்லூரி மாணவி காயம்
சென்னை: சென்னை காமராஜர் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி வந்த கார் மோதியது. இதில் அந்த மாணவி லேசான காயமடைந்தார்.
நேற்று பிற்பகல் காமராஜர் சாலையில் கனிமொழி தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது உழைப்பாளர் சிலை பகுதியில், சாலையைக் கடக்க முயன்ற பிருந்தா என்ற 22 வயது கல்லூரி மாணவி மீது கார் மோதி விட்டது.
இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அங்கிருந்த பொதுமக்களும், போலீஸாரும் விரைந்து வந்து மாணவியைத் தூக்கி விட்டனர். பின்னர் அவர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சைக்குப் பின்னர் தான் நலமாக இருப்பதாகவும், வீடு திரும்ப விரும்புவதாகவும் மாணவி கூறியதைத் தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் பிருந்தாவின் வீட்டுக்குச் சென்று அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications