ஜோதிபாசுவை சந்தித்தார் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்று பார்த்தார்.

96 வயதாகும் ஜோதிபாசு நிமோனியா காரணமாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் அவ்வப்போது லேசான முன்னேற்றம் காணப்பட்டாலும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளார்.

நேற்று அவரது உடல்நிலை அபாய கண்டத்தை எட்டியிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஜோதிபாசுவின் உதவியாளர் ஜெயகிருஷ்ண கோஷ் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்யாவை போனில் தொடர்பு கொண்டு ஜோதிபாசுவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கொல்கத்தா சென்று பாசுவை பார்த்துவிட்டு வந்தார்.

இந் நிலையில் இன்று கொல்கத்தா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜோதிபாசுவை பார்த்தனர்.

அப்போது ஜோதிபாசுவுக்காக எந்தவிதமான உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகவும், யாராவது குறிப்பிட்ட டாக்டர் தேவையென்றால் அவரை அழைத்து வருவதாகவும் பிரதமர் பாசுவின் மகனிடம் கூறினார். சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த சிங் உடனே டெல்லி திரும்பினார்.

பிரதமரின் இந்த பயணத்தால் டெல்லியில் இன்று நடக்கவிருந்த மத்திய அமைச்சவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

வதந்தி பரப்பிய டிவி சேனல்கள்:

இந் நிலையில் ஜோதி பாசுவின் உடல் நிலை குறித்தும் அவர் இறந்துவிட்டதாகவும் பல வட நாட்டு டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வதந்தி பரப்பின.

யார் முதலில் செய்தி தருவது என்ற போட்டியில் இந்த சேனல்கள் மகா மட்டமான முறையில் நடந்து கொண்டன.

இது குறித்து ஜோதிபாசுவின் மகன் சந்தன் பாசு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது தந்தை குறித்து தவறான செய்தி பரவியதால் தானும், தனது குடும்ப உறுப்பினர்களும் வேதனைக்கு உள்ளாவதாக தெரிவித்த அவர், ஊடகங்கள் வதந்திகளை பெரிதுபடுத்தக் கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+