ஜோதிபாசு உடல் நிலை மோலும் மோசமடைந்தது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் நிலைமை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
95 வயதாகும் ஜோதிபாசு, நிமோனியா காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது முழு செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை செயல் இயக்குநர் டி.என்.அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அவருடைய பொதுவான உடல் நிலை மோசமடைந்து வருகிறது. சிறுநீர் போவது குறைந்து வருகிறது. மயக்க நிலைக்கு அவர் போய்க் கொண்டிருக்கிறார்.
அதேசமயம், அவரது உடல் உறுப்புகள் செயலிழக்குமா என்பதை இப்போது கூற முடியாது. பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் சிக்கல்கள் தோன்றியுள்ளன என்று மட்டுமே சொல்ல முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications