லேட்-விமானத்தில் ஏற ரஜினிக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'போர்டிங் பாயிண்டுக்கு' லேட்டாக வந்து சேர்ந்ததால் ரஜினிகாந்த்தை விமானத்தில் ஏற்ற தனியார் விமான நிறுவனம் மறுத்து விட்டது. இதையடுத்து வேறு விமானம் மூலம் ரஜினி கிளம்பிச் சென்றார்.
திருவனந்தபுரம் செல்வதற்காக தனியார் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார் ரஜினிகாந்த். இன்று காலை 9.30 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் 9.25 மணிக்குத்தான் விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
போர்டிங் பாயிண்டுக்கு பயணிகள் வந்து சேர வேண்டிய நேரத்தைத் தாண்டி ரஜினி வந்ததால் விமானத்தில் அவரை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர் விமான நிறுவனத்தினர்.
இதை ரஜினியும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ற இன்னொரு விமானத்தில் அவர் கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications