Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக-காங் இடையே நல்லுறவு: பீட்டர் அல்போன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்ல இணக்கமான போக்கு நிலவுகிறது. எனவே காங்கிரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே யாரும் பிரச்சனையை எவரும் ஏற்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ்,

கவர்னர் உரை சராசரி அரசின் உரையல்ல, முதல்வரும் ஒரு சராசரி மனிதர் அல்ல என்ற அளவிற்கு சிறப்பான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கே நல்ல மனமும், தகுதியும் இருந்தவர்கள் இந்த கவர்னர் உரையை பாராட்டினார்கள். சில அரசியல் கட்சிகள் நம்மை புரிந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, அவர்களை அவர்களே புரிந்து கொள்ளாத நிலையில்தான் உள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு மக்களால் வரவேற்கத்தக்கது. இதற்கு வழங்கப்படுகிற 60 ஆயிரம் ரூபாயை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஆயிரம் வீடுகள் வீதம் இந்த திட்டத்தில் கட்டித் தர வேண்டும்.

விலைவாசி உயர்வு பற்றி நிறைய பேசினார்கள். தற்போது வர்த்தகம் வினாடிக்கு வினாடி, மணிக்கு மணி கண்டம்விட்டு கண்டம் தாவுவதால் பொருட்கள் இருந்தும் ஏழை மக்களுக்கு அவை கிடைக்கவில்லை.

விலைவாசி உயர்வை பிரதமரே ஏற்றுக் கொண்டிருக்கிறார் அது தான் பேராண்மை. சுட்டிக் காட்டும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. அத்துடன் ஆலோசனை சொல்லும் கடமையும் இருக்கிறது. கடந்த 25 நாட்களில் அரிசி, கோதுமை, விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தி இருக்கின்றன. சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ
பாலபாரதி, விலைவாசி உயர்வை குறைக்க மத்திய அரசு சுண்டு விரலை கூட அசைக்கவில்லை என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சிவபுண்ணியம் பேசுகையில், சர்க்கரை விலையை கட்டுப்படுத்த இங்குள்ள கரும்பு விவசாயிகளை மத்திய அரசு ஏன் ஊக்கப்படுத்தவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய பீட்டர் அல்போன்ஸ் சொன்ன சில ருத்துக்களுக்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு தரப்புக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்துப் பேசிய பீட்டர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தமிழக அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்த சட்டத்தின் பலன் மக்களை அடைய முதல்வர் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வதால் மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. மிக அதிகபட்ச நிதியுதவியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறது.

கேட்க தகுதியுடையவர்கள் கேட்கிறார்கள். கொடுக்க மனம் உடையவர்கள் கொடுக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் எங்களின் தலையீடு இல்லாமல் நாட்டில் எந்த சமூக- பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டதில்லை.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்ல இணக்கமான போக்கு நிலவுகிறது. எனவே காங்கிரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம்.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதோடு கொசுக்களை ஒழிப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றார் பீட்டர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+