மதுரை ஏர்போர்டுக்கு தேவர் பெயர்: பா.பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், திண்டுக்கல்லில் மாநில தலைவர் நவமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் சிறுமலையில் 25 கோடி ரூபாய் அளவிற்கு மரம் கடத்தலை ஊக்குவித்த அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிககப்பட்டது.
மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்றும், ஆத்தூர் காமராஜர், வேடசந்தூர் அழகாபுரி அணைகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், விவசாய கிணறு வெட்ட கடன் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications