புதுச்சேரி அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வீடுகட்ட புதுச்சேரி அரசு 4 ஆண்டுகளாகியும் அறிவித்தபடி மானியத்தொகை வழங்கவில்லை என தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் குற்றம்சாட்டியுள்ளார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்கள் கல்வீடு கட்டிக் கொள்வவும், பழுதடைந்த வீடுகளை சரி செய்யவும், மானியமாக ரூ 2.8 லட்சம் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு சட்டசபையில் அறிவித்தது.

ஆனால், 'அதை இன்று வரை நடமுறைபடுத்தபடாமல் மீனவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்' என்று முன்னாள் தமிழக அமைச்சரும், அ.தி.மு.க நிர்வாகியுமான ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி அண்ணாசிலை முன்பு அ.தி.மு.க சார்பில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகையில், 'கடல் மீன் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தில் பாரம்பரிய மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமான மீன் பிடி தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. மீனவர்களின் ஜீவாதார உரிமையை பறிக்கும் இந்த சட்ட மசோதாவை ஒருபோதும் தாக்கல் செய்யக்கூடாது. இந்த வரைவு சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு வீட்டு மானியமாக ரூ 2.8 லட்சம் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தது. ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் புதுச்சேரி அரசு இதுவரை தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+