இந்த ஆண்டு மேலும் 3 சூரிய-சந்திர கிரகணங்கள்!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: இந்த ஆண்டில் மேலும் 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பிர்லா அறிவியல் மைய இயக்குநர் பி.ஜி.சித்தார்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜூன் 26ம் தேதி பகுதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதையடுத்து ஜூலை 11ம் தேதி முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. இது இந்தியாவில் தெரியாது.
இந்த ஆண்டின் கடைசியில், டிசம்பர் 21ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறும். இது இந்தியாவில் தெரியும்.
பொதுவாக வருடத்திற்கு அதிகபட்சம் 2 கிரகணங்கள்தான் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இன்றைய கங்கண சூரியகிரகணத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு கிரகணங்கள் வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications