'ஓவர் வெயிட்': 9 ஏர் ஹோஸ்டஸ்கள் நீக்கம்-எதிர்த்து வழக்கு

நிறுவன விதிமுறை மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தங்களது எடையைக் குறைக்காமல் விட்டதற்காக இந்த 9 பேரையும் நீக்குவதாக கூறி ஏர் இந்தியா நிறுவனம் இவர்களுக்கு நீக்க கடிதம் கொடுத்துள்ளது.
இதை எதிர்த்து இந்த ஒன்பது பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 9 பேர் சார்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சங்கீதா கார்க் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
இந்த ஒன்பது பேருமே கடந்த 3 ஆண்டுகளாக விமானிப் பணிப் பெண்களாக பணியில் அமர்த்தப்படாமல் இருந்தனர். இவர்களில் சிலருக்கு விமான நிலையங்களில் பணி வழங்கப்பட்டிருந்தது. சிலர் விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு குறித்து சங்கீதாவின் வழக்கறிஞரான அரவிந்த் சர்மா கூறுகையில், ஏர் இந்தியாவின் நடவடிக்கை சட்டவிரோதமானது. இயற்கை நீதிக்குப் புறம்பானது என்றார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருகிற 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நீக்கப்பட்ட 9 பேரும் விமானங்களில் நிச்சயம் பணியாற்ற முடியாது. அவர்கள் தங்களது நீக்க உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி நிர்வாகத்தை அணுகினால் அவர்களுக்கு விமான நிலையப் பணிகளை ஒதுக்க நிர்வாகம் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
ஏர் இந்தியாவின் விதிமுறைப்படி, 18 வயதாகும் ஊழியைக்கு 152 செமீ உயரம் அல்லது ஐந்து அடியாக இருக்க வேண்டும். அதிகபட்ச எடை 50 கிலோவைத் தாண்டக் கூடாதாம்.












Click it and Unblock the Notifications