எருமேலி: பலியான பக்தர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: எருமேலி அருகே விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்கள் 11 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 45 ஐயப்ப பக்தர்கள் ஒரு லாரியில் சபரிமலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு எரிமேலியை அடுத்த பம்பாவேலி அருகே லாரி விபத்துக்குள்ளானது.
கணமலை என்ற இடத்தில் லாரி கட்டுபாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியி்ல் இருந்த ஐயப்ப பக்தர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி டிரைவர் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications