காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை
நெல்லை: காதலன் கற்பழித்து ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அண்ணாவி தோட்டத்தை சேர்ந்த நடராஜன் மகள் டயானா நான்சி. இவரது தாய் இறந்து விட்டார். இதனால் டயானா தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் டயானாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. டயானா வீட்டில் தனியாக இருந்தபோது கண்ணன் கற்பழித்ததாகவும், பின்னர் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கண்ணனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த டயானா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணனிடம் கேட்டார். அதற்கு கண்ணன் மறுத்துவிட்டார்.
இதுபற்றி டயானா கூடன்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 9ம் தேதி கண்ணனை கைது செய்தனர். டயானாவுக்கு நேற்று பாளை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
இந்நிலையில், டயானா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications