மும்பை-'மாயமான' ஐஸ்லாந்து அதிபர் மனைவி!
மும்பை: மும்பை டிரைடன்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ஐஸ்லாந்து அதிபரின் மனைவி திடீரென மாயமானதால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐஸ்லாந்து நாட்டின் அதிபர் ஒலஃபர் ரக்னர் கிரிம்சன் இந்தியா வந்துள்ளார். அதிபருடன் மனைவியும் ஐஸ்லாந்து நாட்டின் முதல் பெண்மணியுமான டாரிட் முசாயிஃப்பும் இந்தியா வந்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள அதிபருக்கும், அவரின் மனைவிக்கும் உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திங்கள்கிழமை இருவரும் மும்பைக்கு வந்தனர். முதலில் டாரிட் வந்துவிட்டார். அவரை மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி அதிபரின் மனைவி டாரிட்டை காலையில் ஹோட்டலுக்குள் அழைத்து வந்து விட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். பகல் 11.30 மணி வாக்கில் திடீரென அதிபரின் மனைவியை ஹோட்டலில் காணவில்லை.
ஹோட்டலுக்குள் அவர் தங்கியிருந்த பகுதியிலேயே காவல் போடப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிபரின் மனைவியை காணவில்லை என்றதும் போலீசார் எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்றனர். அப்பகுதி முழுவதும் சுமார் ஆறு மணி நேரம் தேடியும் கிடைக்காததால் பொறுப்பில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பதட்டமடைந்தனர்.
உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தயாரானார்கள். மும்பை முழுவதும் உள்ள காவல் நிலையங்களை உஷார்படுத்த கட்டளைகளை பிறப்பிக்க தயாரான நிலையில் அதிபரின் மனைவி சாவகாசமாக ஹோட்டல் வாசலில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
உதவியாளர்கள் யாரும் உடன் இல்லாமல் கையில் நான்கைந்து பைகளுடன் ஷாப்பிங் சென்று வந்திருந்தார் டாரிட்.
இதைப் பார்த்தும் பெருமூச்சு விட்ட போலீசார் பின்னர் அவரை கவனமாக கண்காணிக்கத் தொடங்கினர். அதிபர் மனைவியின் தரப்பில் விசாரித்த போது, அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வருவது பிடிக்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுவந்தார் என்று கூறப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications