ராணுவத் தளபதி தீபக் கபூருக்கு இடது காது கேட்கவில்லை - தடுமாற்றம்

Subscribe to Oneindia Tamil

Deepak Kapoor
டெல்லி: இந்திய ராணுவத் தளபதி தீபக் கபூருக்கு இடது காதில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அந்தக் காது கேட்கவில்லை. இதனால் அவர் தடுமாற்றமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றவர்கள் பேசுவதை சரியாக கேட்க முடியாமல் அவர் அவதிப்படுவதாகவும் கூறப்படுகின்றன. இதுதொடர்பான மருத்துவ ஆவணங்கள் லீக் ஆகியுள்ளன.

கபூருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு sensorineural hearing loss என்று பெயர். அமெரிக்க ராணுவத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆயுத பரிசோதனையின்போது ஏற்பட்ட பெரும் சத்தத்தால், கபூரின் இடது காது பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராணுவ மருத்துவ தர வரிசையி்ல் கபூர் எச்2 என்ற தரத்தின் கீழ் தற்போது உள்ளார். இந்த வரிசைக்கு ஒரு ராணுவ அதிகாரி வைக்கப்பட்டால், அவர் ராணுவப் பணிக்குப் பொருத்தமில்லாத அதிகாரி என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் பொறுப்புகளில் உள்ள ராணுவ அதிகாரிகள் மருத்துவ ரீதியாக முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் 42 ஆண்டு கால ராணுவப் பணியை முடித்துள்ள தீபக் கபூர், தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் காதில் கோளாறு ஏற்பட்டு பெரும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பபட்டுள்ளார்.

வருகிற மார்ச் மாதத்துடன் தீபக் கபூர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், குறைந்த உடல் தகுதியுடன் ஓய்வு பெறும் நிலையில் அவர் உள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறும் முதல் ராணுவத் தளபதி தீபக் கபூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+