திமுகவில் இணைந்த மாஜி அதிமுக எம்பி குழந்தைவேலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஜி அதிமுக எம்.பியான குழந்தைவேலு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திருச்செங்கோடு தொகுதி முன்னாள் அதிமுக எம்.பியான இவர் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும் அதிமுக:

இந் நிலையில் குழந்தைவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினேன். 1977ம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக என்னை நிறுத்தி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் மீது அன்பும் பாசமும் வைத்துள்ள லட்சோப லட்சம் தொண்டர்களும், எங்களைப் போன்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் கூட பார்க்க அனுமதி மறுக்கும் ஜெயலலிதா தலைமையை ஏற்று இனியும் கட்சியில் தொடர விருப்பமில்லாத லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தலைவர் கருணாநிதி தலைமையை ஏற்று திமுகவில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாவுக்கு பின் கழகத்தை தலைமை ஏற்று நடத்த பொறுத்தமானவர், தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என எம்.ஜி.ஆரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் கருணாநிதி.

அவர் 5ம் முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் ஏழைகள் ஏற்றம் பெற அடுக்கடுக்கான சாதனைகளாக 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. மற்றும் எரிவாயு அடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்துடன்,

108 உயிர் காக்கும் அவசர சிகிச்சை வாகனம், குடிசை வீடே இல்லாத தமிழகத்தை உருவாக்கிட 21 லட்சம் காங்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரும் திட்டத்தை தீட்டி சாமானியவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறார்.

தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்று நான் இன்று திமுகவில் இணைக்கிறேன். அதிமுக, தொண்டர்கள் இல்லாத கூடாரமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தலைவர் கருணாநிதி தலைமையில் இணைந்து தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் பாடுபடுவேன். உண்மையான அதிமுக அடிமட்டத் தொண்டர்களும், வாக்காளர்களும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து அண்ணாவின் தம்பி தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி தலைமையேற்று தமிழர்கள் நலன் காக்க பாடுபட வாருங்கள் என்று அழைத்து, தாய் கழகமான திமுகவில் என்னை இன்று முதல் இணைத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் குழந்தைவேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+