விப்ரோ லாபம் 21 சதவீதம் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில், ரூ 7055.8 கோடி அளவுக்கு இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மட்டுமே 31 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது விப்ரோ.
இது குறித்து விப்ரோ சிஎப்ஓ சுரேஷ் சேனாபதி கூறுகையில்,
மீண்டும் ஒருமுறை விப்ரோ தனது பலமான வர்த்தகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மூன்று மாதங்களில் புதிதாக 4,855 பேரை நியமித்துள்ளோம். இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,02,746 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி கூறுகையில், விப்ரோ நிறுவனத்துக்கு தொடர்ந்து சாதகமான வர்த்தக சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு முழுவதும் இது தொடரும் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications