இந்தி, குஜராத்தி பேசினாலும் ஓ.கே.-மகா. முதல்வர்
மும்பை: மராத்தி மொழி பேசுவோருக்கு மட்டுமே டாக்சி ஓட்ட உரிமம் அளிக்கப்படும் என நான் கூறவில்லை. இந்தி, குஜராத்தி மொழிகள் மட்டுமே தெரிந்திருந்தாலும் கூட உரிமம் தரப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் பல்டி அடித்துள்ளார்.
மராத்தி மொழி பேசித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இனி டாக்சி உரிமம் வழங்கப்படும், அவர்கள் மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என நேற்று அறிவித்தார் சவான். இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து இன்று தனது கருத்திலிருந்து பின்வாங்கினார் சவான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது லைசன்ஸ் வைத்துள்ள யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வராது. மராத்தி என்றில்லை, குஜராத்தி, இந்தி தெரிந்திருந்தாலும் கூட உரிமம் வழங்கப்படும்.
மகாராஷ்டிர மோட்டார் வாகனச் சட்டத்தின்படிதான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த சட்டத்தில், 15 ஆண்டுகள் உள்ளூரில் (மகாராஷ்டிரா) வசித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதைத்தான் அரசு கூறியது என்றார் சவான்.












Click it and Unblock the Notifications