பள்ளி மாணவிகளை ஆபாச படம் பிடித்த ஆசிரியர்!
ஹாங்காங்: ஹாங்காங்கில் சிறு வயது பள்ளி மாணவிகளை அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்த பள்ளி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஹாங்காங் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஹென்ரி சான் என்ற ஆசிரியர் மாணவிகளை ஆபாசமாக படமெடுப்பதாக புகார் எழுந்தது.
32 வயதான இந்த ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பொய்யான காரணங்களைக் கூறி தனது வீட்டிற்கு வரவழைக்கிறார் என்றும் அங்கு மாணவிகளை அரைகுறை ஆடைகளுடன் படம் எடுக்கிறார் என்றும் புகார் கூறப்பட்டது.
போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர். ஆசிரியர் இதுபோல பல மாணவிகளை வீட்டிற்கும் ஹோட்டல்களுக்கும் வரவழைத்து படங்கள் எடுத்து பணமும் கொடுத்து வந்ததாக தெரியவந்தது.
ஆசிரியர், 11 வயதில் இருந்து 15 வயது வரை உள்ள மாணவிகளை இவ்வாறு படம் எடுத்துள்ளார். சிறுமிகளை பாலியல் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் குற்றத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஹென்ரி சான் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து மாணவிகளின் 1600 நிர்வாண படங்கள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications