காய்ச்சல், இருதய பாதிப்பு - மருத்துவமனையில் அர்ஜூன் சிங் - தேறி வருகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், நெஞ்சடைப்பு, காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
79 வயதாகும் அர்ஜூன் சிங்குக்கு நேற்று திடீரென நெஞ்சடைப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சலும், சளியும் இருந்தது. இதுதவிர இருதயப் பிரச்சினையும் ஏற்கனவே இருந்ததால் உடனடியாக அவர் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை அவரது நிலை சற்று மேம்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நான்கு பேர் கொண்ட டாக்டர் குழு அர்ஜூன் சிங்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications