ராஜபக்சேவுடன் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை: சந்திரிகா மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவருடன் பிரச்சார மேடையில் தோன்றும் திட்டம் எதுவும் இல்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாயின.
ராஜபக்சேவுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் அத்தகவல்களை சந்திரிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'ராஜபக்சேவுடன் பிரச்சார மேடையில் தோன்றும் எண்ணம் எதுவும் இல்லை.
இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும ராஜபக்சேவுடன் இணையும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை' என்று சந்திரிகா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications