புத்தகம் படித்து, படம் பார்த்து பொழுதைக் கழிக்கும் அத்வானி
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இப்போதெல்லாம் புத்தகம் படித்தும், படங்கள் பார்த்தும் பொழுதைக் கழித்து வருகிறாராம் எல்.கே.அத்வானி.
முன்பை விட இப்போது அத்வானிக்கு கை நிறைய நேரம் உள்ளது. அவற்றை உருப்படியாக கழிக்க அவர் நாடுவது புத்தகங்களையும், நல்ல திரைப்படங்களையும்தான்.
பல்வேறு இலக்கிய, புராண நூல்களையும், நல்ல திரைப்படங்களையும் தனது மகள் பிரதீபாவுடன் சேர்ந்து பார்த்து பொழுதைக் கழித்து வருகிறாராம்.
82 வயதாகும் அத்வானி தான் இப்போது எப்படியெல்லாம் நேரத்தை செலவழித்து வருகிறேன் என்பது குறித்து அளித்துள்ள பேட்டியில், இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. எனவே அவற்றை புத்தகம் படிப்பதில் பெருமளவில் செலவிட்டு வருகிறேன்.
மிட்ச் ஆல்பாம் எழுதிய 'Have a Little Faith' என்ற நூலை இப்போது படித்து வருகிறேன். அவருடைய முந்தை நூலான 'Tuesdays with Morrie' என்ற நூலையும் சேர்த்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதை ஏற்கனவே படித்து விட்டேன். தற்போது மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அத்வானி.
அத்வானி தற்போது 2வது முறையாக படித்து வரும் 'Tuesdays with Morrie' என்ற நூல், 1997ம் ஆண்டு வெளியானது. பின்னர் இது டிவி படமாகவும் தயாரிக்கப்பட்டது என்பது உபரித் தகவல்.












Click it and Unblock the Notifications