மார்பகத் தொற்று - மருத்துவமனையில் சோம்நாத் அனுமதி
கொல்கத்தா: மார்பகத் தொற்று நோய் பிரச்சினை காரணமாக முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சுமன் கோஷ் கூறுகையில், அவரது உடல் நிலை ஸ்திரமாக உள்ளது. கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்றார்.
80 வயதான சோம்நாத் சாட்டர்ஜிக்கு காய்ச்சல், சளிப் பிரச்சினையும் உள்ளது. அவருக்கு டாக்டர் சுபாஷிஷ் கோஷ் தலைமையிலான டாக்டர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
நல்ல உடல் நிலையில் சோம்நாத் இருப்பதாகவும், அவருக்கு ஆன்டி பயாடிக் மருந்துகள் தரப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் கூறியுள்லனர்.
2004 முதல் 2009 வரை லோக்சபா சபாநாயகராக இருந்தவர் சோம்நாத். பதவிக்காலத்தின் கடைசிக் காலத்தில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தற்போது தீவிர அரசியலிலிருந்து அவர் விலகியிருக்கிறார். மறைந்த ஜோதிபாசுவின் தீவிர ஆதரவாளர்களில் சோம்நாத்தும் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
--












Click it and Unblock the Notifications