3ஜி ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 25,000 கோடி கிடைக்கும் - ராசா

கோவையில் பிஎஸ்என்எல் 3 ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்திய பின்னர், அமைச்சர் ஆ ராசா கூறியதாவது-
வரும் பிப்ரவரியில் 3 ஜி அலைக்கற்றை ஏலம் நடக்கிறது. இதில் 5 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் ஒரு செலுத்தும் கட்டணமாக ரூ 35000 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போதுள்ள நிலையில் எப்படியும் ரூ 25000 கோடிக்கு மேல் இந்த ஏலத்தின் மூலம் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இப்போது அறிமுகமாகும் 3 ஜி செல்போன் சேவையை, 2 ஜி சிம்கார்டு வைத்திருப்பவர்களும் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
4 ஜி தொழில்நுட்பத்தை இப்போதைக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை. காரணம் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் அதை எதிர்த்து வருகிறது. மேலும் சில தொழில்நுட்ப பிரச்சினைகளும் உள்ளன. எப்படியும் அடுத்த ஓராண்டுக்குள் 4 ஜி சேவை அறிமுகமாகும்.
பிஎஸ்என்எல் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளவுக்கு முன்னேற முடியாமல் இருப்பதாக சொல்ல முடியாது.
காரணம் 2.5 லட்சம் பணியாளர்கள் உள்ள சமூகப் பொறுப்பு மிக்க நிறுவனம் இது. பிஎஸ்என்எல் சேவைக்கு நிகராக யாரு தர முடியாது. கிராமப் புறங்களில் சமூக அக்கறையோடு சேவையைத் தருவது பிஎஸ்என்எல்தான்", என்றார்.












Click it and Unblock the Notifications