தேர்தல் ஆணைய வைர விழா தொடங்கியது - ஜெ., சோனியா பங்கேற்பு
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் தொடக்க விழா இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜெயலலிதா, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி வைர விழா கொண்டாட்டம் தொடங்கியது.
இன்று மாலை டெல்லி விஞ்ஞான் பவன் அரங்கில் தொடக்க விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற பாஜக தலைவர் அத்வானி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் என கிட்டத்தட்ட 40 முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவரும், சோனியாவும் சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அப்படி ஒரு சந்திப்பு இதுவரை நடைபெறவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதிக்குப் பதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications