எஸ்.எஸ்.சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகரும், அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
67 வயதான எஸ்.எஸ்.சந்திரன் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் இன்று காலை திடீரென அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் எஸ்.எஸ்.சந்திரன் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.












Click it and Unblock the Notifications