மும்பை-தரையிறங்கிய ஈரான் விமான டயர் வெடித்தது
Subscribe to Oneindia Tamil
மும்பை: டெஹரானில் இருந்து இன்று காலை மும்பை வந்த ஈரான் விமானம் தரையிறங்கும் போது திடீர் கோளாறு ஏற்பட்டு, விமானத்தின் டயர்கள் வெடித்தன.
எனினும் பெரும் விபத்து ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 100 பயணிகளும் பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.
மும்பை சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் இன்று காலை 8.02 மணிக்கு ஈரான் விமானம் தரையிறங்கிய போது கோளாறு ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டயர் வெடிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடப்பதாகவும், குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரியவரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐஆர் 810, தற்போது ஓடுதளத்தின் 49வது நிறுத்தத்தில் உள்ளதாகவும், இதனால் மற்ற விமான போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications