பத்மவிபூஷண் விருது- வெங்கி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய அரசு தனக்கு பத்மவிபூஷண் விருது அளித்திருப்பது கெளரவம் தருவதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும், நோபல் பரிசு வென்ற தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் பிறந்த நாடு எனக்கு அளித்துள்ள இந்த விருது எனக்கு கெளரவம் தருவதாகவும், மனதைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது. எனது பணியை அங்கீகரித்து இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன் என்றார் ராமகிருஷ்ணன்.
கடந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரத்தில் பிறந்தவரான வெங்கி, கேம்பிரிட்ஜ் எம்ஆர்சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications