ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!

காந்தியின் 141வது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் தரப்பட்டுள்ளது.
தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஹில்கிராப்ட் மாவட்டத்திற்குத்தான் காந்தியின் பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதம் முதல் இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
இதற்கான அறிவிப்பை ஹில்கிராப்ட் மேயர் அனிஸ் பார்க்கர் அறிவித்தார். அப்போது இந்திய துணைத் தூதர் சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார்.
ஹில்கிராப்ட் பகுதி மினி இந்தியா என்று அழைக்கப்படுகிது. இங்குள்ள இந்திய கலாச்சார மையம்தான், காந்தியின் பெயரை இந்தப் பகுதிக்கு சூட்ட கடுமையாக முயற்சித்து வந்தது. கடந்த 7 ஆண்டு கால முயற்சியின் விளைவாக தற்போது காந்தி பெயர் இங்கு சூட்டப்பட்டுள்ளது.
ஹில்கிராப்ட்டுக்கு காந்தி பெயர் சூட்டப்பட்டிருப்பதை அங்குள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
இங்கு நகைக் கடை பிசினஸில் ஈடுபட்டுள்ள உஷா என்பவர் கூறுகையில், இது இந்தியர்களை அங்கீகரித்துள்ளது போல உள்ளது. பெருமையாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications