ஷகீலாவிடம் நீதிபதி தனி விசாரணை-வக்கீல்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

ஆபாசப் படத்தில் நடித்தது தொடர்பாக நடிகை ஷகீலா, நடிகர் திணேஷ் உள்ளிட்டோர் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டுக்கு வந்திருந்தார் ஷகீலா. அப்போது, அவரை நீதிபதி தனியாக அழைத்து வாக்குமூலம் வாங்கினார். இது நெல்லை மாவட்ட வக்கீல்களிடையே எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று நடந்த வக்கீல்கள் சங்க பொதுக் கூட்டத்தில் நீதிபதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 65 பேர் இந்த எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டனர்.
ஆனால் நீதிபதி ஆதரவு வக்கீல்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நீதிபதிக்கு எதிராக கொண்டு வரவிருந்த தீர்மானம் கைவிடப்பட்டு கூட்டம் கலைந்தது.












Click it and Unblock the Notifications