'அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' - அழகிரி குறித்த நூல் நாளை வெளியீடு
Subscribe to Oneindia Tamil

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மாலை 6.30 மணிக்கு விழா நடைபெறுகிறது. மாநில அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை தாங்குகிறார். மாநகர திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
ரத்தினவேல் புத்தகத்தை வெளியிடுகிறார். தியாகராஜர் மில்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கருமுத்து தி.கண்ணன் புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கவிஞர் கனிமொழி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி நன்றியுரை நவில்கிறார்.
அழகிரிக்கு ஜனவரி 30ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications