கோவாவில் 9 வயது ரஷ்ய சிறுமி கற்பழிப்பு
பனாஜி: கோவாவில் தாயுடன் சுற்றுலா வந்த 9 வயது ரஷ்ய சிறுமியை கற்பழித்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரஷ்ய பெண் ஒருவரை உள்ளூர் கும்பல் சுற்றிவளைத்து கற்பழித்ததாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு பெண்கள் ஒழுக்கமான ஆடைகளை உடுத்தினாலோ அல்லது கண்ட நேரங்களில் கண்ட இடங்களில் சுற்றாமல் இருந்தலோ இதுபோன்ற பிரச்னை வராது என கோவா எம்.பி நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
அரைகுறை ஆடைகளுடன் கடற்கரையில் காற்றுவாங்கும் வெளிநாட்டு இளம்பெண்கள் தான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக உள்ளூர் அரசியல்வாதிகள் கூறிவந்தனர்.
ஆனால் தற்போது, தாயுடன் சுற்றுலா வந்த, கடல் தண்ணீரில் குதூகலமாக குளித்து விளையாடிக் கொண்டிருந்த 9 வயது ரஷ்ய சிறுமியை காம கொடூர வாலிபர்கள் தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர்.
இச்சம்பவமும் இந்திய குடியரசு கொண்டாடப்பட்ட 26ம் தேதி இந்த சம்பவம் நடந்திருப்பது ரஷ்ய மீடியாக்களிடையே இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவின் ஆரம்போல் பீச்சில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிறுமியை கடல் நீரில் விளையாட வைத்துவிட்டு சற்று தூரத்தில் தாய் அமர்ந்து அமர்ந்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுற்றுலாவுக்கு வந்த ஒருவன், சிறுமியிடம் தகாத முறையில் நடந்திருக்கிறான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்றும் புரியாமல் அழுதுகொண்டே தாயிடம் புகார் கூறியுள்ளார்.
அதை பார்த்ததும் அந்த ஆசாமி தப்பித்து ஓடிவிட்டான். அவனைப் பற்றிய அடையாளத்தை சிறுமியின் தாயாரிடம் கேட்டு தெரிந்துகொண்டோம்.
அவன் பெயர் அமான் என்பது வரை தற்போது தெரிந்துள்ளது. அவன் அருகில் உள்ள லாட்ஜ் ஏதேனும் ஒன்றில் தான் தங்கியிருக்கக் கூடும்.
லாட்ஜில் இருந்து தப்பித்தாலும் எப்படியாவது அவனை மடக்கிவிடுவோம் என போலீசார் கூறியுளளனர்.
இதற்கிடையே, மத்திய அரசுக்கு ரஷ்ய தரப்பில் இருந்து நெருக்குதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது மட்டுமல்லாமல், இனி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் ரஷ்ய அரசு எதிர்பார்க்கிறது.
இல்லையெனில் கோவாவுக்கு ரஷ்ய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications