தொடர்ந்து சரியும் தங்கம் விலை!
Subscribe to Oneindia Tamil

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,534-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 272-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைக்கு மட்டும் ரூ 76 குறைந்திருந்தது தங்கம் விலை.
இந்த விலையில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது.
ஒரு கிராம் ரூ.1,523-க்கும், பவுன் 12 ஆயிரத்து 184-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.88 குறைந்ததால் நகை வாங்கும் மக்கள் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள நகைக் கடைகளில் குவிகின்றனர்.
இது குறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், 'திருமண நேரத்தில் விலை குறைந்துள்ளதால் வியாபாரம் அதிகரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிக அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே இந்த போக்கு தொடரும்" என்றார்.












Click it and Unblock the Notifications